பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலைப்பெரிதும் அலங்களிக்கும்.அரங்கநாதனின் மூவர்ண டசினாக்கைத் தந்து உதவிய, தமிழ் நாடு ஆலய அறக்குழு ஆணையர்.திரு.சாரங்கபாணிமுதலியார் அவர்களுக்கு நன்றி. இந்நூலில் ஆனந்தத் தாண்டவம் புரியும் கூத்தப் பெருமான் பிளாக்கைத் தந்து உதவிய திருநெல்வேலித்தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாருக்கு நன்றி. இந்நூலின் பின்னே சேர்க்கப்பெற்றிருக்கும் தேவாரத் தல வணக்கப் போற்றிப் பாடலை வெளியிட இசைவுதந்த, காரைக்குடி சிநேசர் திருக்கூட்டத்தாருக்கு நன்றி. என் அரிய நண்பர்,அறநிலைய திருவாகத்துறை ஆணையராக இருந்து,கோவில்களையெல்லாம் மிகச்சிறப்பாகச் சீர்திருத்தம் செய்து, தேவார-திவ்வியப் பிரபந்தக் கோவசில்களிலெல்லாம் பெரியோர்கள் பாடல்களைக் கல்வெட்டில் செதுக்கிய அ. உத்தண்டராமன் பிள்ளை அவர்கள். நான் கேட்டவுடன் விரைந்து இந்நூலுக்கு அரியதோர் அணிந்துரை தந்து உதவி னார்கள். அவர்களுக்கு உளங்கனிந்த நன்றி. இந்நூலைத் தொகுப்பதில் தமிழ்க்கட லோடு உடன் இருந்து பொறுப்பாக அரிய தொண்டு செய்த, என் நண்பர், ரா. பதுமநாபன் அவர்கட்க நன்றி. இந்நூல் வெளிவரப் பலவாறு உதவிய அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. மிகக் குறுகிய கால அளவில் இதனை நன்கு அச்சடித்து, உருவாக்கி அமைத்துத் தந்த, என் நெடுநாளைய நண்பரும் பக்திமானுமான பதஞ்சலிபிரஸ் உரிமையாளர்,திரு. பதஞ்சலி பத்மநாபய்யர் அவர்களுக்கும், அவரது அச்சக நிருவாகி 'அம்மாஞ்சி'பதுமநாபனுக்கும்.அச்சகத்தைச்சார்ந்தோருக்கும் என் உளம்கனிந்த நன்றி. இறுதியாக, எங்கள் குடும்பத்தைப் பரம்பரை பரம்பரையாகத் தனக்குப் பலவாறு திருத்தொண்டு செய்ய வைத்து, ஆட்கொள்ளும் அரியக்குடியூரீநிவாசப்பெருமாளின் திருவடிக் கமலங்களில்,என் மணிவிழா வெளியீடாக மலரும், இம்மலரை அணிவரிக்கின்றேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். சென்னை i8-}{3-33 க. வெ. சித. வெ. வேங்கடாசலம் செட்டியார்