பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 75 75. கண்டியூர் வீரட்டானேசுரர்-மங்களநாயகி. சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டநான் : 18-12-கன் 2-4-88. தஞ்சை-திருவையாறு சாலையில்,தஞ்சையினின்றும்ஆறு கல். திரு.ஐயாற்றிற்கு ஒன்றரை மைல். மேற்குப் பார்த்த சந்நிதி. எட்டு வீரட்டத் தலங்களுள் ஒன்று. பிரமனின் தலையைக் கிள்ளிய தலம். இத் தலத்தில் எதிர்ப் புறம் உள்ள திருமால் கோயிலும் மங்களா சாஸனம் பெற்றது. சம்பந்தர் கருத்தனை,பொழில் சூழும்கண்டியூர் வீரட்டத்துறை கள்வனை. அருத்தனைதிறம் அடியார்பால்மிகக் கேட்டுஉகந்த வினாஉரை திருத்தமாம்திகழ் காழிஞானசம் பந்தன்செப்பிய செந்தமிழ் ஒருத்தர் ஆகிலும் பலர்கள் ஆகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே அப்பர் வான மதியமும். வாள்.அர வும்.புன லோடுசடைத் தானம் இதுஎன வைத்துஉழல் வான்தழல் போல்உருவன்: கான மறிஒன்று கையுடை யான்கண்டி யூரிருந்த ஊனம்இல் வேதம் உடையானை நாம்அடி உள்குவதே. 76. திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர்-ஒப்பிலாஅம்மை சம்பந்தர் : 1. அப்பர் : 4 சுந்தரர் : 1 வழிபட்டநாள் : 18-12-56, 2-1-56. கண்டியூருக்குக் கிழக்கு ஒன்றரைக் கல்.