பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திருத்தலப்பயணம் சம்பந்தர் பெண்ஒர் பாகம் உடையார் பிறைசென்னிக் கண்ஒர் பாகம் கலந்த துதலினார்: எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய அண்ணல் சோற்றுத் துறைசென்று அடைவோமே. அப்பர் ஆட்டி னாய்அடி யேன்வினை ஆயின. ஒட்டி னாய்ஒரு காதில் இலங்குவெண் தோட்டி னாய்என்று சோற்றுத் துறையர்க்கே நீட்டி நீபணி செய்மட நெஞ்சமே. சுந்தரர் ஒதக் கடல்நஞ் சினைஉண்டு இட்ட பேதைப் பெருமான் பேணும் பதியாம்: சிதப் புனல்உண்டு எரியைக் காலும் சூதப் பொழில்துழி சோற்றுத் துறையே. 77. திருவேதிகுடி வேதபுரீசுரர்-மங்கையர்க்கரசி சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டநாள் : 18-12-56, 2-1-86. கண்டியூரினின்றும் தென்கிழக்கே இரண்டு கல். திருச்சோற்றுத்துறைக்கும். இத்தலத்திற்கும் குறுக்கே இரண்டு கல் அளவு. வேதி குடி வேறு வேள்விக்குடி வேறு. சம்பந்தர் செய்யதிரு. மேணிமிசை வெண்பொடி, அ ணிைந்து.கரு மான்உரிவை போர்த்து ஐயம்இடும் என்றுமட மங்கையொடு.அ கம்திரியும் அண்ணல் இடம்ஆம் வையம்விலை மாறிடினும் ஏறுபுகழ் மிக்கஇழிவு இலாத வகையார் வெய்யமொழி தண்புலவ ருக்கு உரை.செ யாதஅவர் வேதி குடியே.