பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 77 அப்பர் எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர். தாமொழியப் பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார். திண்னன் வினைகளைத் திர்க்கும் பிரான்.திரு வேதிகுடி நண்ண அரிய அமுதினை. நாம்அடைந்து ஆடுதுமே. 78. தென்குடித்திட்டை (திட்டை) பகபதிநாதர்-உலகநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 12-1-57, 1-1-66. தஞ்சை-மாயூரம் இருப்புப் பாதையில் திட்டை என்ற பெயரில் இரயில் நிலையம். தஞ்சைக்கு வடகிழக்கு ஆறு கல். சம்பந்தர் ஊறினார் ஒசை.உள் ஒன்றினார் ஒன்றிமால் கூறினார் அமர்தரும் குமரவேள் தாதைஊர் ஆறினார் பொய்அகத் தைஉணர்வு எய்திமெய் தேறினார் வழிபடும் தென்குடித் திட்டையே. 79. திருப்புள்ளமங்கை (பசுபதிகோயில்) ஆலந்தரித்தநாதர்-அல்லியங்கோதை சம்பந்தர் வழிபட்டநாள் : 24-3-57, 13-1-66. திருவையாறு-ஐயம்பேட்டை சாலையில், ஐயம்பேட்டைக்கு மேற்கே இரண்டரைக் கல். பசுபதி கோயில் இரயில் நிலையத்திலிருந்து ஒன்றரைக் கல்.