பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 79 நாலுகல். பாவநாசம் இரயில் நிலையத்திலிருந்து தெற்கே நாலுகல். இத்தலம் வெட்டாற்றின் தென்கரையில் இருக்கிறது. சம்பந்தர் மையல் இன்றிமலர் கொய்துவ ணங்கிடச் செய்ய உள்ளம்மிக நல்கிய செல்வத்தர் கைதன் முல்லைகம ழும்கரு காஆர்எம் ஐயர் வண்ணம்அழ லும்அழல் வண்ணமே. அப்பர் குருகுஆம் வயிரம்ஆம் கூறும் நாள்.ஆம் கொள்ளும் கிழமைஆம் கோளே தான்.ஆம் பருகா அமுதம்.ஆம் பாலின் நெய்ஆம் பழத்தின் இரதம்.ஆம் பாட்டில் பண்ணாம் ஒருகால் உமையாளோர் பாக னும்ஆம் உள்நின்ற நாவிற்கு உரையா டிய்யாம் கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. 82. திருப்பாலைத்துறை பாலைவனநாதர்-தவளவெண்நகையாள் அப்பர் : 1 வழிபட்டநாள் : 27-2-56, 13-1-66. பாவநாசம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே ஒருகல், தஞ்சைகும்பகோணம் பெருவழிச்சாலையில் பாவநாசம் ஊருக்கு அண்மையில் இத்தலம் இருக்கிறது. அப்பர் மின்னின் நுண் இடைக் கன்னியர் மிக்குளங்கும் பொன்னி, நீர்மூழ்கிப் போற்றி அடிதொழ மன்னி நான்மறை யோடுபல் கிதமும் பன்னி னார்.அவர் பால்ைத் துன்றியரே.