பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருத்தலப்பயணம் 83. திருநல்லூர் பெரியாண்டேசுரர்-திரிபுரசுந்தரி கலியாணசுந்தரர்-கலியாணசுந்தரி சம்பந்தர் : 3 அப்பர் : 2. வழிபட்டதாள் : 27-2-58 13-1-66, கும்பகோணத்தை அடுத்த சுந்தரப்பெருமாள் கோயில் இரயில் நிலையத்திற்குத் தெற்கே இரண்டுகல் தொலைவு. இத்தலம் அப்பர் சுவாமிகளுக்குத் திருவடித்திட்சை நல்கிய சிறப்புடையது. இத்தலத்தில் பெருமாள் கோயிலில் சடாரி வைப்பதைப் போல, அப்பர் சுவாமிகளுக்குச் சூட்டப்பெற்ற "நனைந்தனைய திருவடி" பொறித்த கிரீடத்தை இன்னும் அடியார்கள் தலையில் சூட்டுகின்றனர். மேலும், அறுபான் மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய அமரர் நீதி நாயனாருக்கு வீடுபேறு அருளிய தலம் இது. சம்பந்தர் எங்கள் பெருமானை. இமையோர் தொழுதுஎத்தும் நங்கள் பெருமானை. நல்லூர் பிரிவில்லாத் தம்கை தலைக்குஏற்றி ஆள்என்று அடிநீழல் தங்கு மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே. அப்பர் நினைந்துஉருகும் அடியாரை நைய வைத்தார்; நில்லாமே திவினைகள் நீங்க வைத்தார் சினம்திருகு களிற்றுஉரிவைப் போர்வை வைத்தார்: செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர் இனம்துருவி மணிமகுடத் தேறத் துற்ற இனமலர்கள் போதுஅவிழ்ந்து மதுவாய்ப் பில்கி, நனைந்துஅனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார். நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே!