பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 81 சேக்கிழார் நன்மைபெருகு அருள்நெறியே வந்துஅணைந்து நல்லுனரின் மன்னுதிருத் தொண்டனார் வணங்கிமகிழ்ந்து எழும்பொழுதில் "உன்னுடைய நில எப்பதனை முடிக்கின்றோம்" என்று அவர்தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான். 84. ஆவூர்ப்பசுபதிச்சுரம் பசுபதிசுரர்-மங்களநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநான் : 24-3-57, 13-1-88. ஆவூர் ஊரின் பெயர். பசுபதிச்சுரம் கோயிலின் பெயர். கும்பகோணத்திற்குத் தென் மேற்கே நான்கு மைலிலுள்ள பட்டிச்சரத்திற்குத் தென்மேற்கே நாலரைக் கல். திருக்கருகாவூரிலிருந்து வட கிழக்கே நான்கு கல். கோவில் சிறுமலைமீது இருக்கிறது. அம்பாள் சந்நிதி இரண்டு. ஒன்று மங்களவல்லி. இன்னொன்று பங்கயவல்லி. சம்பந்தர் இந்துஅணை யும்.சடையார் விடையார் இப்பிறப்பு என்னை அறுக்கவல்லார்: வந்துஅணைந்து இன்னிசை பாடுவார்பால் மன்னினர் மன்னி யிருந்தஊராம் கொந்துஅணை யும்குழ லார்விழவில் கூட்டம் இடைஇடை சேரும்வீதி, பந்துஅணை யும்விர லார்தம் ஆவூர்ப் பசுபதிஈச்சரம் பாடுநாவே!