பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 83 சம்பந்தர் பிறவிபிணி மூப்பினொடு நீங்கிஇமை யோர்.உலகு பேணல் உறுவார் துறவிஎனும் உள்ளம்உடை யார்கள்கொடி வீதியழகு ஆய தொகுசிர் இறைவன்உறை பட்டிசரம் ஏத்தினழு வார்கள்வினை ஏது மிலவாய் தறவவிரை யாலும்மொழி யாலும்வழி பாடுமற வாத அவரே! 87. பழையாறைவடதளி சோமேசர்-சோமகலாநாயகி அப்பர் : 1 வழிபட்டநாள் : 5-1-57, 15-1-66. பட்டீச்சரத்திலிருந்து தென்கிழக்கே ஒரு கல். பழையாறை என்றும், வடதளி என்றும் இரு தலங்களாக உள்ளன. வடதளியில் இறைவன் பெயர் தருமபுரீசுவரர். தேவி, விமலநாயகி. பழையாறை அமர்நீதி நாயனார் பிறந்தருளியதலம். இதற்கு அண்மையில் முழையூர் என்ற வைப்புத் தலம் இருக்கிறது. அப்பர் வாய்.இ ரும்தமி ழே,படித்து ஆள் உறா ஆயி ரம்சம னும்அழிவு ஆக்கினான்: பாய்இ ரும்புனல் ஆறை வடதளி மேய வன்.என வல்வினை வீடுமே!