பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருத்தலப்பயணம் சேக்கிழார் சிரில் நீடிய செம்பியர் பொன்னிநன் னாட்டுக் காரின் மேவிய களிஅளி மலர்பொழில் சூழ்ந்து தேரின் மேவிய செழுமனி வீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை. 88. திருவலஞ்சுழி கற்பகநாதர்-பெரியநாயகி சம்பந்தர் : 3 அப்பர் : 2. வழிபட்டதான் : 31-12-55, 26-6-65 இரயில் நிலையம் சுவாமிமலை, கும்பகோணத்திற்கு மேற்கே நான்கு கல் அளவு. இத் தலத்தில் வெள்ளைப் பிள்ளையார் பெரும் சிறப்புடையது. கோவிலுக்குள் துழைந்தவுடன் வேலைப்பாடு அமைந்த அழகிய மண்டபத்தில் பிள்ளையார் வீற்றிருக்கின்றார். அப்பிள்ளையாரை யாரும் தொடக் கூடாதாம். பிள்ளையார் இயல்பாகவே நல்லவெள்ளை நிறமாக அமைந்திருக்கிறது. இத் தலத்தில் திருவிழா எல்லாம் விநாயகருக்குத்தானாம். சம்பந்தர் என்ன புண்ணியம் செய்தனை. நெஞ்சமே! இரும்கடல் வையத்து முன்னம் நீபுரி நல்வினைப் பயன்இடை முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாய்ஆரப் பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே.