பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை திரு. அ. உத்தண்டராமன். . A. S.ேேtல்.) 'எப்போதகத்து நினைவார்க்கிடரில்லை கைப் போத கத்தின் கழல்' 'C.W.CTV என்று அன்புடன் எல்லோராலும் அழைக்கப் பெறும் உயர் திரு. வெங்கடாசலம் செட்டியாரவர்கள் தெய்வ பக்தியிலும் பொது நலத் தொண்டிலும் பெரும் புகழ் பெற்று விளங்குபவர். கொடைவள்ளல் அழகப்பச்செட்டியாரவர்கள் விட்டுச் சென்ற கல்வி நிறுவனங்களை அரும் பாடுபட்டுக் காத்து வரும் அவர் தனிப்பெருந் திறத்தை அளவிட முடியாது. அன்னாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் 18-10-66 செவ்வாய்க் கிழமையன்று நன்டை பெற இருக்கிறது. அவர்களை நான் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக அறிவேன். இராமனாதபுர மாவட்டத்தில் வடபகுதி நாட்டாண்மைக்கழகத் தலைவராக, பெரும்புகழுடன் பணியாற்றியதை நேரில் கண்டேன். கிராம மக்களின் பொருளுதவி உழைப்பு மூலம் கிராமங்களின் நலனைப் பெருக்க முடியு மென்பதைச் செயல் முறையில் காட்டிய முதல்வர் அவர்ே. இராமனாதபுரம் வடபகுதியில் உள்ள போக்கு வரத்துச் சாலைகள், பொது நல நிறுவனங்கள் பல இன்றும் அவர் வகுத்த திட்டத்தில் உருவானவைகளேயாகும். பொது நலப்பணிகள் எல்லாவற்றிலும் அவருடைய ஆற்றலையும் செல்வாக்கையும் அந்த மாவட்டஆட்சியினர் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். நகரத்தாரிடையே மட்டுமின்றி எல்லா மக்களிடமுமே அவருக்குச் செல்வாக்கு நிறைய உண்டு. வாழ்வில் அவருக்கு யாதொரு குறையும் இருந்ததில்லை. அவருடைய அன்பு மனைவியார்ை இழந்ததொன்றை மாத்திரம் அவர் குறையாகக் கருதலாம். ஆனால் அந்த அம்மையார் சம்பந்தப் பட்டவரை அவர் மறைவு அவருக்கு நல்ல முடிவேயாகும். 'வினைப் போகமே தேகங் கண்டாய் வினைதானொழிந்தால் தினைப் போதளவு நில்லாது கண்டாய்' என்பது பட்டினத்தார் வாக்கு. செட்டியாரவர்கள் வாழ்க்கைத் துணைவியார் அண்ணா மலையரசரின் புதல்வி. அவருடைய பெண் மக்களிருவரும் தொழில் மேதை அ. மு. மு. குடும்பத்தில் பெறற்கரிய கணவரைப் பெற்று இனிது வாழ்கின்றனர். அவருடைய மகனும் அண்ணாமலையரசரின் மகன் வழிப்பேத்தியாகிய தன் முறைப் பெண்ணையே மணம் செய்து கொண்டு,வணிகத் துறையில் சிரும் சிறப்பும்பெற்று வாழ்கிறார். எனவே உலக வாழ்வில் இறைவன் அவருக்கு அளித்திருப்பது இன்பமே. அவரிப்போது அருள் வாழ்வில் பேரின்பம் காண விழைவது இயற்கையே. அவர் பிறப்பால் சைவ ராயினும் சைவ வைன்வ பேதமின்றியே பக்தி சிலராக விளங்கிவருகிறார். இப்போது உணவிலும் சைவ ராகவே மாறியது பாராட்டுக்குரியது.அரியக்குடிவெங்கடாசலபதி திருக்கோயிலில்