பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 85 Joshuff கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம் எயில்கள் தினழ வெல்வல வித்தகன் மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனைப் பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே. தக்கிரதேவதாயனார் தான்ஏறும் ஆன்ஏறு கைதொழேன் தன்சடைமேல் தேன்.எறு கொன்றைத் திறம்பேசேன்-வான்ஏறு மையாரும் சோலை வலஞ்சுழியான் என்கொல்? என் கையார் வளைகவர்ந்த வாறு. 89. குடமூக்கு (கும்பகோணம்) கும்பேசுரர்-மங்களநாயகி சம்பந்தர் : 1. அப்பர் : 1 வழிபட்டநாள் : 30-12-55, 25-6-85. இரயில் நிலையம். கோவில் மிகப் பெரியது நடு ஊருக்குள் அமைந்திருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மகாமகம் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகிறது. மங்களநாயகி சன்னிதி பெரும் சிறப்புடையது. இத்தலத்திற்கு மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை புராணம் இயற்றியுள்ளார். சம்பந்தர் மலைமலி மங்கைபா கம்மகிழ்ந் தான்.எழில் வையம்உய்யச் சிலைமலி வெங்கணை யால்சிதைத் தான்புர மூன்றினையும் குலைமலி தண்பல வின்பழம் வீழ்குட மூக்குஇடமா இலைமலி சூலம்ஏந் திஇருந் தான்.அவன் எம்இறையே!