பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருத்தலப்பயணம் அப்பர் நங்கை யாள்உமை யான்உறை நாதனார் அங்கை யாளொடு அறுபதம் தாழ்சடைக் கங்கை யாள்.அவள் கன்னி எனப்படும் கொங்கை யான்உறை யும்குட மூக்கிலே. 90. குடந்தைக்கிழ்க்கோட்டம் (நாகேசுரசுவாமி கோயில்) நாகேசுரசுவாமி-பெரியநாயகி அப்பர் : 1 வழிபட்டநான் : 2-1-56, 17-10-85 கும்பேசரசுவாமி கோவிலுக்குக் கிழக்கே அரைக் கல் அளவில் நடுவூருக்குள் கோவில் இருக்கிறது. இதனை நாகேசுர சுவாமி கோவில் என்று கூறுவர். இங்குக் கூத்தப் பெருமான் சன்னிதி மிகச் சிறப்புடையது. கோவில் பெரியது. இறைவன் சன்னிதியின் முன் கங்கை கொண்ட கணபதி அழகிய தோற்றமுடையது. ஆண்டு தோறும் சித்திரைத் திங்கள் 11, 12. 13 ஆகிய மூன்று நாட்களிலும் சூரியன் தோன்றும்போது சூரிய ஒளிமகாலிங்கத்தின் மீதுபடிவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். அப்பர் பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலு ருள்ளார் புறம்பயத்தார். அறம்புரிபூந் துருத்திபுக்கு, மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்: மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல, திச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக்கு ஈந்து. திருவானைக் காவில்ஓர் சிலந்திக்கு அந்நாள் கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும் குடந்தைக்கிழ்க் கேட்டத்துஎம் கூத்த னாரே.