பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 諡 ஐயடிகள் காடவர்கோன் நாகனார் கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று தடுதடுத்து தாவடங்கா முன்னம்-பொடியடுத்த பாழ்க்கோட்டம் சேராமுன் பன்மாடத் தென்குடத்தைக் கிழக்கோட்டம் செப்பிக் கிட 91. குடந்தைக்காரோணம் (விசுவநாதர்கோயில்) காசிவிகவதாதர்-காசிவிசாலாட்சி சோமநாதர்-தேனார்மொழி சம்பந்தர் : ! வழிபட்டதான் : 31-12-55, 17-10-65 இக்கோவில்கும்பகோணம் இரயில்திலையத்திலிருந்து சுமார் அரைக் கல் தொலைவில், மகாமகப் பெருங்குளத்தின் வடகரையிலிருக்கின்றது. இதனைக்காசிவிசுவநாதர்கோவில் என்று கூறுவர். இங்கே நவ கன்னியர்களின் திருவுருவங்கன் இருக்கின்றன. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக நாளில்,கோவிலுக்கு முன்னுள்ள மகாமகக் குனத்தில் இலட்சக்கணக்கான மக்கள் நீராடுவர். மகாமக நாளன்று கும்ப கோணத்திலுள்ள பல கோவில் சுவாமிகளும் இங்கு எழுந்தருளும். அன்று கணக்கற்ற சிவபெருமான்களை இங்குக் கண்டு மகிழலாம். சம்பந்தர் பூவார் பொய்கை அலர்தா மரைசெங் கழுநீர் புறவுஎல்லாம் தேவார் சிந்தை அந்தண் ஆளர் சிரால் அடிபோற்றக் கூவார் குயில்கள் ஆலும் மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை காவார் பொழில்துழிந்து அழகுஆர் குடந்தைக் காரோணத்தாரே.