பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருத்தலப்பயணம் சேக்கிழார் பூமருவும் கங்கைமுதல் புனிதமாம் பெருந்திர்த்தம் மாமகம்தான் ஆடுதற்கு வந்துவழி படும்கோயில், து மருவு மலர்க்கையால் தொழுதுவலம் கொண்டு அணைந்து காமர்கெட நுதல்விழித்தார் கழல்பணிந்து கண்களித்தார். 92. திருநாகேச்சுரம் நாகநாதேசுரர்-குன்றமுலைநாயகி சம்பந்தர் : 2. அப்பர் : 4. சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 1-1-55, 17-10-65. இரயில் நிலையம். கும்பகோணத்துக்குக்கிழக்கே நான்கு மைல். திருவிடை மருதுர் இரயில் நிலையத்துக்குத் தென் மேற்கே இரண்டரை மைல், பெரியபுராணம் பாடியருளிய சேக்கிழார் அடிகள் இத்தலத்தில் பெரிதும் அன்பு கொண்டி ருந்தாரென்றும், தாம் பிறந்த குன்றத்துரிலே அவர் கட்டிய கோவிலுக்குத் திரு நாகேச்சுரம் என்று பெயரிட்டார் என்றும் கூறுவர். இத்தலத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் பக்கத்தில் பரவையார் படிமம் அமைந்திருக்கின்றது. சம்பந்தர் பெண்ஒர்பாகம் அடையச் சடையில் புனல்பேனிய வண்ணம்ஆன பெருமான் மருவும்இடம் மண் உளார் நண்ணிநாளும் தொழுதுஏத்தி நன்குஎய்து நாகேச்சுரம் கண்ணினால் காணவல்லார் அவர்கண் உடையார்களே. அப்பர் கச்சைசேர் அரவர் போலும், கறையணி மிடற்றர் போலும்: பிச்சைகொண்டு உண்பர்போலும் பேரரு ளாளர்போலும், இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை நச்சுவார்க்கு இனியர் போலும் நாகசச் சரவ னாரே.