பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 89 சுந்தரர் தங்கிய மாதவத்தின் தழல்வேள்வியின் நின்றுஎழுந்த சிங்கமும், நீள்புலியும் செழுமால்கரி யோடுஅலறப் பொங்கிய போர்புரிந்து பிளந்திரி உரி போர்த்ததென்னே செங்கயல் பாய்கழனித் திருநாகேச் சரத்தானே. 93. திருவிடைமருதுரர் மகாலிங்கேசுரர்-பெருநலமாமுலைநாயகி சம்பந்தர் : சி. அப்பர் : 5. சுந்தரர் :1. வழிபட்டநாள் : 6–1–57, 3–1–66. இரயில் நிலையம், கும்பகோணத்துக்கு வடகிழக்கு ஐந்து கல். இத்தலத்தை வடநூலார் மத்திய அர்ஜுனம் என்பர். வடக்கே உள்ள பூரீசைலம் மல்லிகார்ஜுனம் என்றும்,தெற்கே நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திலிருந்து மூன்றுகல் தொலைவில் தாம்பிரவருணி ஆற்றங்கரையிலுள்ள திருப்புடார்ஜுனமும் இருத்தலால் இது மத்தியார்ஜுனம் என்று கூறப் பெறுகிறது. மத்திய அர்ஜுனம் இடைமருது. இத்தலம் மூவர் தேவாரமும் பெற்றதோடு திருவாசகம் பெற்ற சிறப்பும் உடையது. திருவிடைமருதூர் திருவாசகத்தில் ஐந்து இடங்களில் பேசப்பெறுகிறது. மேலும் கருவூர்த் தேவர் திருவிசைப்பாவிலும், பட்டினத்தடிகள் பாடலிலும் இத் தலம் இடம் பெற்றிருக்கிறது. கோவில் மிகப் பெரியது. நான்கு புறங்களிலும் கோபுரங்கள் கொண்டது. கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்னும் புலவர் இத்தலத்துக்ப் புராணம் பாடியுள்ளார். சம்பந்தர் அருமையன், எளிமையன். அழல்விடம் மிடறினன். கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியினன். பெருமையன். சிறுமையன். பிணைபெனொடு ஒருமையின் இருமையும் உடைஅணல். இடம்.இடை மருதே.