பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 திருத்தலப்பயணம் அப்பர் கணியி னும்,கட்டி பட்டக ரும்பினும், பணிம லர்க்குழல் பாவைநல் லாரினும், தனிமு டிகவித்து ஆளும் அரசினும். இனியன் தன் அடைந் தார்க்குஇடை மருதனே. சுந்தரர் கழுதை குங்குமம் தான்சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ்புக மற்று.அது போலப் பழுது நான் உழன்று உள்தடு மாறிப் படுக Nத்தலைப் பட்டனன். எந்தாய்! அழுது நீஇருந்து என்செய்தி மனனே! அங்க ணா!அர னே!என மாட்டா இழுதை யேனுக்குஓர் உய்வகை அருளாய்! இடைம ருதுஉறை எந்தைபி ரானே! மணிவாசகர் மூன்றுஅங்கு இலங்கு நயனத்தன் மூவாத வான்தங்கு தேவர்களும் காணா மலர்அடிகள் தேன்தங்கித் தித்தித்து அமுது:ஊறித் தான்தெளிந்தங்கு ஊன்தங்கி நின்றுஉருக்கும் உத்தர கோசமங்கைக் கோன்தங்கு இடைமருது பாடிக் குலமஞ்ஞை போன்றுஅங்கு அனநடையீர்! பொன்னுசல் ஆடாமோ! கருவூர்த்தேவர் பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன பல்லவம் வல்லிஎன்று இங்கன் வினைபடு கனகம் போலயா வையுமாய் வீங்குலகு ஒழிவற நிறைந்து துணிபடு கலவி மலைமக ளுடனாய்த் தூங்கிருள் நடுநல்யா மத்துனன் மனனிடை அணுகி நுணுகி.உள் கலந்தோன் மருவிடம் திருவிடை மருதே.