பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 91 பட்டினத்துப்பிள்னையார் வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிப்போய்ப் பொருந்தேன் நரகில் புகுகின்றி லேன் புகழ் மாமருதில் பெருந்தேன் முகந்துகொண்டு உண்டு பிறிதுஒன்றில் ஆசைஇன்றி இருந்தேன். இனிச்சென்று இரவேன் ஒருவரை யாது.ஒன்றுமே. 94. தென்குரங்காடுதுறை (ஆடுதுறை) ஆபத்சகாயேசுரர்-பவளக்கொடி சம்பந்தர் : 1. அப்பர் : ! வழிபட்டதான் : 6-1-57, 3-1-66. இரயில் நிலையம். திருவிடைமருதுாருக்குக் கிழக்கு இரண்டரை மைல், சுக்கிரீவன் வணங்கிய தலம். அனுமனும் இத்தலத்தை வழிபட்டான் என்ப. சம்பந்தர் விழிக்கும் நுதல்மேல் ஒருவெண் பிறைது.டி. தெழிக்கும் புறங்காட்டு இடைச்சேர்ந்து எரிஆடி பழிக்கும் பரிசே பலிதேர்ந்து அவன்ஊர்.பொன் கொழிக்கும் புனல்துழி குரங்காடு துறையே. அப்பர் நற்ற வம்செய்த நால்வர்க்கு நல்அறம் உற்ற நன்மொழி யால்அருள் செய்ததல் கொற்ற வன்குரங் காடு துறைதொழப் பற்றும் தீவினை ஆயின பாறுமே.