பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திருத்தலப்பயணம் 95. திருநீலக்குடி (தென்னல்குடி) நீலகண்டேசுரர்-உமையம்மை அப்பர் : 1 வழிபட்டநாள் : 6-1-57, 14-1-86 ஆடுதுறை இரயில் நிலையத்திலிருந்து இரண்டரைக் கல். திருவிடைமருதூர் இரயில் நிலையத்துக்குத் தென்கிழக்கு ஐந்து மைல். அப்பர் சுவாமிகளைச் சமணர்கள் கல்லைக்கட்டிக் கடலில் இட்டதற்கு, அப்பர் சுவாமிகள் பாடிய அகச்சான்றாகிய பின்வரும் தேவாரப் பாடல் இத்தலத்தில் எழுந்தது. "சொல் துணை வேதியன்" என்ற தேவாரப் பாடலில் "கல்துணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்" என்றிருப்பதால், கடலில் வீழ்த்திய செய்தியை அறிவிக்கும் அகச்சான்றாக அப்பாடலைக் கொள்ளுமாறில்லை. அப்பர் கல்லி னோடுஎனைப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர்புக நூக்க.என் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக் குடிஅரன் நல்ல நாமம் நவிற்றிஉய்ந் தேன்.அன்றே. 96. வைகன்மாடக்கோயில் வைகல்நாதர்-கொம்பில்இளங்கோதை சம்பந்தர் : 1 வழிபட்டநாள் : 1.0-8-57, 15-1-66 நீலக்குடியினின்றும் தென்கிழக்கே மூன்று கல். வைகல் என்பதற்குத் தென்மேற்கு சிறிது துரத்தில் மாடக் கோவில்