பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 93 இருக்கிறது. இரண்டுகோவில்கள் உள்ளன. இம்மாடக்கோவில் கோச்செங்கட்சோழனால் கட்டப்பெற்றகோவில்களுள் ஒன்று. சம்பந்தர் கொம்புஇயல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத் தும்பிய துரிசெய்த துங்கர் தங்குஇடம் வம்புஇயல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே. 97. திருநல்லம் (கோனேரிராயபுரம்) உமாமகேசுரர்-மங்களநாயகி. சம்பந்தர் : 1. அப்பர் : 1. வழிபட்டநாள் : 25-3-57, 14-1-86 திருவிடைமருதுருக்குத் தென்கிழக்கு ஆறுகல். மேற்குப்பார்த்த சன்னிதி. இத்தலத்திலுள்ள உலோகத்தாலான கூத்தப் பெருமான் திருவுருவம் உலகிற் சிறந்த ஒரு பேருருவம், சம்பந்தர் கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டா!என்று எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த வில்லால் அரண்மூன்றும் வெந்து விழஎய்த நல்லான் நமைஆள்வான் நல்லம் நகரானே. அப்பர் மாத ராரொடு மக்களும் சுற்றமும் பேத மாதிப் பிரிவதன் முன்னமே நாதன் மேவிய நல்லம் நகர்தொழப் போது மின் எழு மின்!புக லாகுமே.