பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 திருத்தலப்பயணம் 98. கோழம்பம் கோகிலேசுரர்-செளந்தரநாயகி சம்பந்தர் : 2 அப்பர் : 1. வழிபட்டநாள் : 1.1-8-57, 15-1-66, மாயூரத்துக்கு மேற்கே 10 கல் தொலைவில் உள்ள நரசிங்கம் பேட்டை இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே இரண்டு மைல். சம்பந்தர் நெடியானொடு அயன்அறி யாவகை நின்றதோர் படியானை. பண்டு.அங்க வேடம்ப யின்றானை, கடியாரும் கோழம்பம் மேவிய வெள்ஏற்றின் கொடியானைக் கூறுமின் உள்ளம் குளிரவே. அப்பர் சமர சூரபன் மாவைத் தடிந்தவேல் குமரன் தாதை.நல் கோழம்பம் மேவிய அமரர் கோவினுக்கு அன்புடைத் தொண்டர்கள் அமர லோகமது ஆளுடை யார்களே. 99. திருவாவடுதுறை மாசிலாமணிநாதர்-ஒப்பிலாமுலையாள் சம்பந்தர் : 1. அப்பர் : 5, சுந்தரர் : 2. வழிபட்டநாள் : 11-1-57, 3-1-66. மாயூரத்துக்கு மேற்கு 10கல் தொலைவிலுள்ள நரசிங்கன் பேட்டைஇரயில் நிலையத்திலிருந்து ஒன்றரைமைல் தொலை வில் இத்தலமிருக்கிறது. கும்பகோணம்-மாயூரம்நெடுஞ்சாலை