பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 95 யில் சிறிது விலகிச் சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாவடுதுறை ஆதினம் இத்தலத்தின் பெயர் கொண்டதே. கோவில் பெரியது. பத்தாம் திருமுறை பாகிய, திருமந்திரம் என்னும் சைவர்கள் போற்றும் மூவாயிரம் திருப்பாடல்கள் கொண்ட பெருநூலை. திருமூலநாயனார் இத்தலத்திலேயே அருளினார் என்ப. திருவிசைப்பா ஆசிரியருள் ஒருவராகிய திருமாளிகைத் தேவர் வாழ்ந்த பதி இது என்பர். திருவிசைப்பாவில் சேந்தனார் இத்தலத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். சம்பந்தர் இடரினும் தளரினும் எனது உறுநோய் தொடரினும் உனகழல் தொழுதுஎழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே! இதுவோஎமை ஆளுமாறு? ஈவதுஒன்றுஎமக்கு இல்லையேல் அதுவோஉனது. இன்அருள் ஆவடுதுறை அரனே! அப்பர் மாயிரு ஞாலம் எல்லாம் மலரடி வணங்கும்போலும் பாயிரும் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலும் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே. சுந்தரர் மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை வலிய வந்து.எனை ஆண்டுகொண் டானே! கண்ணி லேன் உடம் பில்அடு நோயால் கருத்து அழிந்துஉனக் கேபொறை ஆனேன்; தெண்ணி லாஎறிக் கும்.சடை யானே! தேவனே திரு ஆவடு துறையுள் அண்ணலே!எனை அஞ்சல்என் றருள்வாய். ஆர்எ னக்குஉறவு அமரர்கள் ஏறே!