பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 திருத்தலப்பயணம் சேந்தனார் பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்துள்ளே பாலிப்பான் போலும்என் ஆருயிர்ப் போகமாம் புரகால காமபு ராந்தகன் சேலும் கயலும் திளைக்குநீர்த் திருவா வடுதுறை வேந்தனொடு ஆலும் அதற்கே முதலுமாம் அறிந்தோம் அரிவைபொய் யாததே. 100. திருத்துருத்தி (குற்றாலம்) வேதேசுரர்-முகிழாம்பிகை சம்பந்தர் : 1; அப்பர் : 1. சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 10-1-57, 13-10-85. கும்பகோணம்-மாயூரம் இருப்புப் பாதையில் குற்றாலம் என்னும் இரயில் நிலையம். இத்தலம் மூவர் தேவாரத்தோடு திருவாசகமும் பெற்ற சிறப்புடையது. திருவாசகத்தில் இத்தலம் இரண்டு இடங்களில் பாராட்டப்படுகிறது. ஐயடிகள் காடவர் கோன் நாயனார் சிறப்பித்துச் சொல்லிய தலங்களில் இதுவும் ஒன்று. சம்பந்தர் கரும்பள வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவின் அழித்த கரும்பொடு தேன்மல்கு துனமலர்க் கொன்றையம் சுடர்ச்சடையார் அரும்பன வனமுலை அரிவையோடு ஒருபகல் அமர்ந்தபிரான் விரும்புஇடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே. அப்பர் உடல்தன்னைக் கழிக்கல் உற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் இடர்தன்னைக் கழிக்கவேண்டில் இறைவனை ஏத்து மின்னோ கடல்தனில் நஞ்சம் உண்டு காண்பரி தாகி நின்ற சுடர்தனைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.