பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 97 சுத்தார் புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப் பொன்களே சுமந்துளங்கும் பூசல்செய்து ஆர்ப்ப. இலங்கும்.ஆர் முத்தினோடு இனமணி இடறி இருகரைப் பெருமரம் பீழ்ந்துகொண்டு எற்றிக் கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் விலங்குமாறு அறிகிலேன் எம்பெரு மானை மேலைநோய் இம்மையே வீடுவித் தானை. மணிவாசகர் உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்துஎன் உளம்மன்னி கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை அருத்தியினால் நாய்அடியேன் அணிகொள்தில்லை கண்டேனே! ஐயடிகன் காடவர்கோன் தாயனார் வஞ்சியன துண்இடையார் வான்தடங்கண் நீர்சோரக் குஞ்சி குறங்கின்மேல் கொண்டிருந்து-கஞ்சி அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே! திருத்துருத்தி யான்பாதம் சேர். 101. திருவழுந்துளர் (தேரழுந்துனர்) வேதபுரீசுரர்-செளந்தரநாயகி சம்பந்தர் : 1 வழிபட்டநாள் : 10-1-57 13-10-85. கும்பகோணம்-மாயூரம் இருப்புப்பாதையில் உள்ள தேரழுந்துளர் இரயில் நிலையத்தினின்றும் சுமார் 2 கல் அளவு. மாயூரம்-கும்பகோணம் நெடுஞ்சாலை, தேரழுந்துளர் இரயில் நிலையத்தை ஒட்டியே செல்கின்றது.