பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருத்தலப்பயணம் இத்தலத்தில் சிவபெருமான் மேற்கு முகமாக இருக்கின்றார். நேரே எதிரில் சுமார் முக்கால் மைல் அளவில் ஆழ்வார் பாடல் பெற்ற ஆமருவிஅப்பன் என்னும் பெருமாள் கிழக்கு முகமாக நிற்கின்றார். இத்தலம் தேவார திவ்வியப்பிரபந்தப் பாடல் சிறப்புப் பெற்றதோடு, கம்பர்பெருமானை அளித்த பெருமையும் உடையது. ஊர்க்கோடியில், "கம்பர்மேடு" என்று ஒன்று இருக்கிறது. அங்குத்தான் கவிச்சக்கரவர்த்தி பிறந்து,வளர்ந்து, வாழ்ந்ததாகக் கூறப் பெறுகிறது. கம்பன் பிறந்தஊர்காவேரி தங்கும்.ஊர்; கும்பமுணி சாபம் குலைந்தஊர்-செம்பதுமத் தாதகத்து நான்முகனும் தாதையும்தே டிக்கானா ஒது.அகத்தார் வாழும்.அழுந்துTர். என்ற தனிப்பாடல் இவ்வூரின் சிறப்பைப் பகரும். சம்பந்தர் நறவுஆர் தலையின் நயவா உலகில் பிறவா தவனே! பிணியில் லவனே! அறையார் கழலாய்! அழுந்தை மறையோர் மறவாது எழமா மடம்மன் னினையே. 102. திருமயிலாடுதுறை (மாயூரம்) மாயூரநாதர்-அபயாம்பிகை அம்சொல்நாயகி சம்பந்தர் : 2 அப்பர் : 1 வழிபட்டநாள் : 1-2-57 19-10-65. இரயில் நிலையம். பெரியகோயில், அம்பிகை மயில் உரு எடுத்து இறைவனை வழிபட்டதலம் என்ப. இத்தலத்திற்கு மகாவித்துவான் மீனாட்சிசந்தரம் பிள்ளை புராணம் பாடியுள்ளார்.