பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100, திருத்தலப்பயணம் 104. திருப்பறியலுார் (பரசலூர்) வீரட்டேசுரர்-இளங்கொடியாள் சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 3-7-57, 19-10-65 மாயூரத்திற்கு அணித்தேயுள்ள செம்பொன்பள்ளி என்னும் தலத்தினின்றும் தென்மேற்கே ஒன்றரைக்கல். அட்ட வீரட்டங்களில் ஒன்று. இது தக்கன் தலையை அறுத்த பதி, சம்பந்தர் நரை.ஆர் விடையான் நலம்கொள் பெருமான் அரைஆர் அரவம் அழகா அசைத்தான் திரை.ஆர் புனல்சூழ் திருப்பறி யலுனரில் விரைஆர் மலர்ச்சோலை வீரட்டத் தானே! 105. திருச்செம்பொன்பள்ளி சொர்ணபுரீசுரர்-மருவார்குழலி சம்பந்தர் : . அப்பர் 2. வழிபட்டநாள் : 3-7-57, 18-10-65. மாயூரத்திற்குக் கிழக்கே ஏழு மைலிலுள்ள செம்பொன்னார் கோயில் இரயில் நிலையம். சம்பந்தர் வார்.ஆர் கொங்கை மாதுஓர் பாகமாய்ச் சிர்ஆர் செம்பொன் பள்ளி மேவிய ஏர்ஆர் புரியுன் சடைனம் ஈசனைச் சேரா தவர்மேல் சேரும் வினைகளே.