பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 101 அப்பர் என்பும் ஆமையும் பூண்டு.அங்கு உழிதர்வார்க்கு அன்பும் ஆயிடும் ஆயிழை பீர்'இனிச் செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை நம்பொன் பள்ளி.உள் கவினை நாசமே. 106. திருநனிபள்ளி (புஞ்சை) நல்துணையப்பர்-மலையான்மடந்தை சம்பந்தர் : 1. அப்பர் : 1. சுத்தரர் : 1. வழிபட்டநாள் : 3-7-57 19-10-85. மாயூரத்துக்கு வடகிழக்கு 8 கல் அளவு வழியில் 4 கல்லில் விளநகரும், 7 கல்லில் செம்பொன்பள்ளியும் இருக்கின்றன. இத்தலத்தில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் தாயார் பிறந்தனர் என்பர். அப்பர்சுவாமிகளுக்குப் பல்லவன் கொடுத்த நஞ்சை அமுதமாக்கிய வரலாறு பற்றி, அப்பர் சுவாமிகளே கூறும் தேவாரப்பாடலை இங்கே காண்க. சம்பந்தர் குளிர் தரு கங்கைதங்கு சடைமாடு இலங்கு தலைமாலை யோடு குலவி - ஒளிர்தரு திங்கள்துடி உமைபாகம் ஆக உடையான் உகந்த நகர்தான் குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட பெடைவண்டு தானும் முரல நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.