பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 103 அங்கிருந்து 2 கல் அளவு செல்லவேண்டும். இதற்குத் தென் மேற்கு ஒன்றரை மைலில் தலைச்சங்காடு என்ற தலம் இருக்கின்றது. இங்கு பிட்சாடனமூர்த்தி வடிவம் பேரழகோடு பொலிகின்றது. சம்பந்தர் புரிதரு புன்சடை பொன்தயங்கப் புரிநூல் புரண்டுஇலங்க விரைதரு வேழத்தின் ஈர்உரிதோல் மேல்மூடி வேய்புரைதோள் அரைதரு பூம்துகில் ஆரணங்கை அமர்ந்தார் இடம்போலும் வரைதரு தொல்புகழ் வாழ்க்கைஅரு வலம்புர நல்நகரே! அப்பர் செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடும் சேதுபந்த னம்செய்து சென்று புக்குப் பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற போர் அரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ, அங்குஒருதன் திருவிரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இந்நாள் வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி வலம்புரமே புக்குஅங்கே மன்னி னாரே, சுந்தரர் எனக்குஇனித் தினைத்தனைப் புகல்இடம் அறிந்தேன் பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல் எனக்குஇனி அவன்தமர்க்கு இனியவன் எழுமையும் மனக்குஇனி யவன்.தனது இடம்வலம் புரமே. 108. தலைச்சங்காடு சங்கருணாதேசுரர்-செளந்தரநாயகி சம்பந்தர் : 1. வழிபட்டநா-ளன் : 31-1-57, 19-10-65 மாயூரம்-தரங்கம்பாடி இருப்புப்பாதையில் உள்ள ஆக்கூர்