பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 105 அப்பர் மாதுாரும் வாள்நெடும்கண் செவ்வாய் மென்தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும் மூதுர் முதுதிரைகள் ஆனார் போலும்: முதலும் இறுதியும் இல்லார் போலும் திதுஊர நல்வினையாய் நின்றார் போலும் திசைஎட்டும் தாமேயாம் செல்வர் போலும் ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி யப்ப னாரே. சேக்கிழார் ஆலைசூழ் பூகவேலி அத்திரு ஆக்கூர் தன்னில் ஞாலமார் புகழின் மிக்கார் நான்மறைக் குலத்தின் உள்ளார் நீலமார் கண்டத்து எண்தோன் திருத்தர்தம் திருத்தொண்டுஏற்ற சிலராய்ச் சாலும்ஈகைத் திறத்தினில் சிறந்த நீரார். 110. திருக்கடவூர் அமிர்தலிங்கேசுரர்-அபிராமிஅம்மை சம்பந்தர் : 1. அப்பர் : 3. சுந்தரர் : 1. வழிபட்டநான் : 31-1-57, 18-10-85. மாயூரம்-தரங்கம்பாடி இருப்புப் பாதையில் உள்ள ஓர் இரயில் நிலையம். மாயூரம்-தரங்கம்பாடி நெடுஞ் சாலையில் 13 கல் தொலையில் இத்தலம் இருக்கிறது. பெரியகோயில். மேற்குப் பார்த்த சந்நிதி. சிறப்புப் பெற்ற அபிராமி அம்மனின் சந்நிதி கிழக்குப் பார்த்தது. அபிராமிப் பட்டர் என்பவர் இனிமையான நூறு பாடல் கொண்ட அந்தாதி பாடியது இவ்,அம்பிகைக்குத்தான். அபிராமி அந்தாதி பாடல் அனைத்தும் அம்மன் கோயிலில் சலவைக்கல்லில் பதிக்கப் பெற்றிருக்கின்றன.