பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருத்தலப்பயணம் இத்தலம் எட்டு வீரட்டங்களுள் ஒன்று. மார்க்கண்டனுக்காகக் காலனைக் கடவுள் உதைத்த பதி இது. காலஸம்ஹார மூர்த்தி இத்தலத்தில்பெரிய வடிவத்தில் கம்பீரமாக அமைந்திருக்கிறது. மகாலிங்கத்தின் மீது எமன் வீசிய பாசத்தழும்பு இருக்கின்றது. குங்கிலியக்கலய நாயனாரும், காரிநாயனாரும் வாழ்ந்து வீடுபேறு அடைந்த தலம் இது. சம்பந்தர் வெந்தவெண் நீறுஅணி வீரட்டா னத்துறை வேந்தனை. அந்தணர் தம்கட ஆர்.உளா னை.அணி காழியான் சந்தம்எல் லாம்அடிச் சாத்தவல் லமறை ஞானசம் பந்தன. செந்தமிழ் பாடிஆ டக்கெடும் பாவமே, அப்பர் பெரும்புலர் காலை மூழ்கி, பித்தற்குப் பத்தர் ஆகி. அரும்பொடு மலர்கள் கொண்டு.ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்கு. கரும்பினால் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே! சுந்தரர் மையார் கண்டத்தி னாய்!மத மாஉரி போர்த்தவனே! பொய்யாது என்உயிர் உள்புகுந் தாய்'இன்னம் போந்து அறியாய்! கையார் ஆடுஅர வாகட ஆர்தன்.உள் வீரட்டத்துஎம் ஐயாlஎன்அமு தேlஎனக்கு ஆர்துணை நீஅலதே! சேக்கிழார் கருப்புவில் லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னி விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்குஎழும் வேட்கை கூர ஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த திருப்பணி பலவும் செய்து சிவபத நிழலில் சேர்ந்தார்.