பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 107 114. திருக்கடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்) பிரமபுரீசுரர்-மலர்க்குழல் மின்னம்மை சம்பந்தர் : 1. அப்பர் : 1. சுந்தரர் : 1. வழிபட்டதாள் : 31-1-57 19-10-85. கடவூர்க் கோயிலுக்குக் கிழக்கே ஒரு கல் அளவு. மணற்பாதை. கார் செல்வது சிறிது கடினம். எனினும் போகலாம். இங்கு ஊர் எதுவும் இல்லை. கோயில் மட்டுமே இருக்கிறது. சம்பந்தர் மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன்ஒன்று ஏந்திக் கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார் செங்கண் வெள்ளேறு ஏறிச் செல்வம் செய்யா வருவார் அங்கை ஏறிய மறியார் அவர்எம் பெருமான் அடிகளே. அப்பர் குழைகொள் காதினர்கோவண ஆடையர் உழையர் தாம்கட ஆரின் மயானத்தார். பழைய தம்அடி யார்செய்த பாவமும் பிழையும் திர்ப்பர் பெருமான் அடிகளே! சுந்தரர் வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து. கானில் வேடுவனாய்க் கோடுஆர் கேழல் பின்சென்று குறுகி, விசயன் தவம்அழித்து. நாடா வண்ணம் செருச்செய்து. ஆவ நாழி நிலை.அருள்செய் பீடுஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே!