பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 திருத்தலப்பயணம் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் உய்யும் மருந்துஇதனை உண்மின் என உற்றார் கையைப் பிடித்துஎதிரே காட்டியக்கால்-பைய எழுந்துஇருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே! செழுந்திரு மயானமே சேர். 112. திருவேட்டக்குடி திருமேனியழகர்-சாந்தநாயகி சம்பந்தர் : ! வழிபட்டநாள் : 10-7-57 18-10-65 காரைக்காலுக்கு வடகிழக்கு 6 மைல். சம்பந்தர் தோத்திரமா மணல்இலிங்கம் தொடங்கிய ஆன்நிரையில்பால் பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்துஅருளி ஆத்தம்என மறைநால்வர்க்கு அறம்புரிநூல் அன்றுஉரைத்த திர்த்தம்மல்கு சடையாரும் திருவேட்டக் குடியாரே. 113. திருத்தெளிச்சேரி (கோயில்பத்து) பார்வதிசுரர்-சத்தியம்மை சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 10-7-57, 18-10-65. காரைக்கால் இரயில் நிலையத்திற்கு வடமேற்கே முக்கால் மைல் அளவு. கோவில் சிறியது. மேற்குப்பார்த்த சந்நிதி.