பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 திருத்தலப்பயணம் 115. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுரர் - போகமார்த்தபூண்முலையாள் சம்பந்தர் : 4. அப்பர் : 2. சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 1.0-7-57 18-10-65. பேரளம்-காரைக்கால் இருப்புப்பாதையில் உள்ள ஓர் இரயில் நிலையம். காரைக்காலுக்கு மேற்கே 3 மைல். சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று. இங்கு சனீசுவரன் கோயில் முக்கியமானது. நளச்சக்கரவர்த்தி வழிபட்டு. சனிநீக்கம் பெற்றத்தலம் இஃது என்ப. கோவிலுக்குப்பக்கத்தில் நளதிர்த்தம் என்னும் பெரியகுளம் இருக்கிறது. இக்குளத்தில் சனிப்பெயர்ச்சிக்கு ஏராளமான மக்கள் வந்து நீராடுகின்றனர். சம்பந்தர் போகம்ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன் அகலம் பாகம்ஆர்த்த பைங்கண்வெள் ஏற்று,அண்ணல் பரமேட்டி ஆகம்.ஆர்த்த தோல் உடையன் கோவண ஆடையின்மேல் நாகம்ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே. அப்பர் இறவாமே வரம்பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபதுதோள் நெரிய ஊன்றி. உறவாகி இன் இசைகேட்டு இரங்கி, மீண்டே உற்றபிணி தவிர்த்துஅருள வல்லான் தன்னை. மறவாதார் மனத்துஎன்றும் மன்னி னானை. மாமதியம், மலர்க்கொன்றை. வன்னி, மத்தம், நறவார்செஞ் சடையானை. நள்ளாற் றானை. நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த வாறே