பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 143 சம்பந்தர் கொந்தண் பொழில்சோலைக் கோல வரிவண்டு மந்தம் மலிஅம்பர் மாகா ளம்மேயே கந்தம் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த எந்தை கழல்ஏத்த இடர் வந்து அடையாவே, 119. திருமீயச்சூர் முயற்சிநாதர்-செளந்தரநாயகி சம்பத்தர் : 1. வழிபட்டதான். -5-56, 24-0-85 பேரளம் இரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒருமைல். இங்கே அம்பிகை வீற்றிருந்த திருக்கோலம். சம்பந்தர் காயச் செவ்விக் காமன் காய்ந்து கங்கையைப் பாயப் படர்புன் சடையில் பதித்த பரமேட்டி மாயச் சூர்அன்று அறுத்த மைந்தன் தாதைதன் மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே. 120. திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேசுரர்-மேகலாம்பிகை அப்பர் : ! வழிபட்டநாள் : 6-5-56, 24-6-65 இக்கோயில் மீயச்சூர் கோயிலுக்குள் சுவாமி சந்நிதிக்கு அண்மையில் இருக்கிறது. சிறிய கோயில், இளங்கோயில் என்பதெல்லாம் ஒரு சமயத்தில் வாலாலயம் செய்து வைத்திருந்தபோது தோன்றியிருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தேவார ஆசிரியர்கள் சென்று பாடியிருக்கலாம்.