பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 திருத்தலப்பயணம் தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும் வேற்றுக் கோயில் பலஉள மீயச்சூர்க் கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையாற்கு எற்றுஅம் கேயில்கண் டீர் இளங் கோயிலே! 121. திலதைப்பதி (திலதர்ப்பணபுரி) (மதிமுத்தம்) முத்திசுரர்-பொற்கொடியாள் சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 9-8-57, 24-6-65 பேரளம் இரயில் நிலையத்திற்குத் தென்மேற்கே மூன்றரை மைல் அளவு. அரிசிலாற்றின் தென்கரையில் கோயில் இருக்கிறது. தயரதச் சக்கரவர்த்திக்கு இராம-இலக்குவர் திலதர்ப்பணம் செய்த இடம் இது என்ப. சம்பந்தர் பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே அடிகள்ஆரத் தொழுது..ஏத்த நின்றஅவ் அழகன் இடம் கொடிகள் ஓங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி வடிகொள்சோலைம் மலர்மணம் கமழும் மதிமுத்தமே. 122. திருப்பாம்புரம் பாம்புரேசுரர்-வண்டார்பூங்குழலி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 6-8-57, 15-1-66. பேரளம் இரயில் நிலையத்திற்கு மேற்கே 4% கல் அளவு. வழியில் ஒருமைலில் மீயச்சூர் இருக்கிறது. இது நாகாராசன்