பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii இந்நூலில் மேற்கு நோக்கிய சந்திதிகள் என்று அங்கங்கே குறிக்கப் பெற்றுள்ளன. கீழ்க் கண்ட சந்நிதிகளும் மேற்கு நோக்கியவையே. இராப்பள்ளி கோட்டுள் ஆனைக்கா திருத்துருத்தி ஆலம் பொழில் முருகன் பூண்டி குடந்தைக்காரோனம் திருச்சோபுரம் திருப்பறியலுனர் திருக்கோவலூர் க.ஆர்மயானம் திருத்துறையூர் நறையூர்ச் சித்திச்சுரம் கச்சிமேற்றவரி அரிசிற்கரைப் புத்துனர் விற்குடி கச்சி நெறிக்காரைக்காடு குரங்கணில் முட்டம் குடவாசில் திருவான்மியூர் கொள்ளிக்காடு அரசிவி நெல்விக்கா கோகர்னம் சாத்த மங்கை திருத்தலப் பயனத்தில் அநேக இடங்களில் சைவ வைணவப் பிணைப்பைப் பார்க்கலாம். சிதம்பரத்திலும் கச்சி ஏகம்பத்திலும் காமாட்சியம்மன் கோயிலிலும் மூன்று திருப்பதிகளும் சிவத்தலங்களும் இணைந்துள்ளன. கிழ்க்கண்ட வைணவத் தலக் கோயில்களில் சிவ சந்நிதிகள் உள்ளன. கரம்பனூர் உத்தமர் கோயில் திருக்கோட்டியூர் திருக்குறுங்குடி வித்துவக்கோடு அதே போல் கீழ்க்கண்ட சிவத்தலக் கோயில்களில் விஷ்ணு சந்நிதிகள் உள்ளன. சிக்கல் திரு அண்ணாமலை திருப்பழனம் இராமேச்சுரம் திருவோத்துனர் திரு உத்திரகோசமங்கை திருநணா திருநெல்வேலி கொடிமாடச் செங்குன்றுார் திருச்செந்தூர் திருநாவலுனர் திருக்குற்றாலம் திருப்பாண்டிக் கொடுமுடி ஆத்துனர் திருவக்கரை சுசிந்தரம் மலை நாட்டில் அநேக ஆலயங்களில் சிவ விஷ்ணு அம்பிகை சந்நிதிகள் கலந்தே இருக்கக் காணலாம். 'CVCT.V.ராய.சொ.இருவருமே சைவ வைணவ பேதமின்றி, சமரச நோக்குடன் எல்லாத் திருத்தலங்களுக்கும் சென்று வழிபட்டிருக்கின்றனர். அவர்கள் இருவரும் ஒன்றே மெய்ப்