பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii.6 திருத்தலப்பயணம் மேற்கே 8 மைல், ஆடுதுறை, பூந்தோட்டம் நிலையங்களி னின்றும் செல்லலாம். வீழிச் செடிகள் மலிந்திருப்பதால் இவ்வூர் இப்பெயர் பெற்றது என்ப. ஊர் சிறியது. கோவில் பெரிய கோவில், வடக்கு வீதியில் கீழ்ப்புறத்தில் சம்பந்தர் கோயிலும், மேற்புறத்தில் அப்பர் கோயிலும் இருக்கின்றன. இறைவன் வீற்றிருக்கும் இடத்திற்கு மேலுள்ளது விண்இழி விமானம் என்று பாராட்டப் பெறுகின்றது. தேவார வரிசையில் இத்தலம் மூன்றாவது விளங்குகின்றது. 1. சிர்காழி. 71 பதிகம் உடையது. 2. திருவாரூர் 34 பதிகம் உடையது. 3. திருவீழிமிழலை 24 பதிகங்கள் கொண்டது. மேலும் இத்தலம் சேந்தனாரின் திருவிசைப்பாப் பெற்றது. சம்பந்தரும், அப்பரும் படிக்காசு பெற்று மக்களின் பட்டினி திர்த்தது இத்தலத்திலேயே என்பர். சம்பந்தர் எழுந்துஉலகை நலிந்துஉழலும் அவுனர்கள்தம் புரமூன்றும் எழிற்கண் நாடி, உழுந்துஉருளும் அளவையின்ஒள் எரிகொள.வெஞ் சிலைவளைத்தோன் உறையும் கோயில் கொழும்தரளம் நகைகாட்டக் கோகநதம் முகம்காட்டக் குதித்து நீர்மேல் விழுந்தகயல் விழிகாட்ட வில்பவளம் வாய்காட்டும் மிழலை யாமே. அப்பர் அன்றுஆவின் கீழிருந்து அங்கு அறம்சொன் னானை, அகத்தியனை உகப்பானை, அயன்மால் தேட நின்றானை. கிடந்தகடல் நஞ்சுஉண் டானை. நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றானை. மீயச்சூர் மேவி னானை, மெல்இயலாள் தவத்தின்நிறை அளக்கல் உற்றுச் சென்றானைத் திருவீழி மிழலை tானைச் சேராதார் திநெறிக்கே சேர்கின் றாரே.