பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 117 சுந்தரர் பரந்த பாரிடம் ஊரி டைப்பலி பற்றிப் பார்த்துஉணும் சுற்ற மாயினர்! தெரிந்த நான்மறை யோர்க்குஇடம் ஆய திருமிழலை இருந்து நீர்தமி ழோடுஇசை கேட்கும் இச்சையால் காசு நித்தல் நல்கினர். அருந்தண் வீழிகொண் டீர் அடி யேற்கும் அருளுதிரே. சேத்தனார் கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றளம் சிவனைத் திருவீழி மிழலைவிற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு உள்ளம் குளிரஎன் கண்குளிர்ந் தனவே. சேக்கிழார் வையம் எங்கும் வற்கடமாய்ச் செல்ல. உலகோர் வருத்தம்உற. நையும் நாளில் பிள்ளையார் தமக்கும் நாவுக் கரசருக்கும். கையில் மானும், மழுவும்உடன் காணக் கனவில் எழுந்தருளிச் செய்ய சடையார் திருவீழி -மிழலை உடையார் அருள்செய்வார்.