பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 திருத்தலப்பயணம் 125. திருவன்னியூர் (அன்னுணர்) திவண்ணர்-பார்வதி அப்பர் : 1. வழிபட்டநாள் ;露$一需一莎乞 荔一星一莎ö。 திருவிழிமிழலைக்கு வடமேற்கே 2 கல். சிறியகோயில். வன்னி என்றால் நெருப்பு என்பது பொருள். அக்கினி வணங்கிய தலம் என்பர். அப்பர் ஞானம் காட்டுவர். நன்னெறி காட்டுவர் தானம் காட்டுவர்: தம்அடைந் தார்க்கெலாம் தானம் காட்டித்தன் தாள்.அடைந் தார்கட்கு வானம் காட்டுவர் போல்வன்னி யூரரே. 126. கருவிலி சற்குணநாதர்-சர்வாங்கநாயகி. அப்பர் : 1. வழிபட்டநாள் : 25-3-57, 15-1-65. இத்தலம் திருநல்லம் என்னும் கோனேரிராசபுரத்திற்குத் தென்மேற்கு ஒன்றரை மைலில் இருக்கிறது. வன்னியூரிலிருந்து இத்தலம் இரண்டரைக்கல்அளவு. கோயிலுக்குக்கொட்டிட்டை என்று பெயர். அப்பர் வாடி நீர்வருந் தாதே மனிதர்காள் வேட னாய்விச யற்குஅருள் செய்தவெண் காட னார் உறை கின்ற கருவிலிக் கோடு நீள்பொழில் கொட்டிட்டை சேர்மினே.