பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 119 127. பேணுபெருந்துறை (திருப்பந்துறை) சிவாநந்தர்-மலையரசி சம்பத்தர் : 1. வழிபட்டதான் : 25-3-57, 25-6-85. கும்பகோணத்திற்குத் தென்கிழக்கு 7 மைல் தொலைவிலுள்ள திருநறையூருக்குக் கிழக்கே, இத்தலம் ஒரு மைல் தொலைவில் இருக்கிறது. "பேணுபெருந்துறையில் கண்ணார் கழல்காட்டி" என்ற திருவாசகத்தில் இத்தலப்பெயர் காணப்படினும் அச்சொற்றொடர் இத்தலத்தைக் குறிக்காது எனவும், அது பேணத்தக்க திருப்பெருந்துறையையே சுட்டும் எனவும் ஆராய்ச்சிக்காரர் கூறுவர். சம்பத்தர் நிலனொடு வானும், நீரொடு தியும், வாயுவும் ஆகி ஒர் ஐந்து புலனொடு வென்று பொய்மைகள் திர்ந்த புண்ணியா! வெண் பொடிப்பூசி நலனொடு திங்கும் தானலது இன்றி நன்கெழு சிந்தையர் ஆகி. மலனொடு மாகம் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறை யாரே. 128. நறையூர்ச்சித்திச்சுரம் சித்தநாதேசுரர்-அழகாம்பிகை சம்பந்தர் : 4 சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 2-1-56, 25-6-65. கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே 5% மைல், வழியில் 4% மைலில் அரசிற்கரைப்புத்துனர் என்னும் தலம் இருக்கிறது.