பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i. 있 }. சோழநாடு சுந்தரர் அகத்தடிமை செய்யும் அந்தணன் தான்.அரி சிற்புனல் கொண்டுவந்து ஆட்டுகின்றான். மிகத்தளர்வு எய்திக் குடத்தையும் நும்முடி மேல்விழுத் திட்டு நடுங்குதலும், வகுத்துஅவ னுக்கு நித்தற் படியும், வரும்என்று ஒருகாசினை நின்றதன்றிப் புகழ்த்துணை கைப்புகச் செய்து உகந்திர்! பொழிலார் திருப்புத்துர் புனிதன் நீரே. 130. சிவபுரம் சிவபுரநாதர்-சிங்காரவல்லி. சம்பந்தர் : .ே அப்பர் : 1. வழிபட்டநான் : -1-56, 13-4-56. கும்பகோணத்திற்குத்தென்கிழக்குமூன்றுகல் அளவு. சிவபுரம் என்றசொல் திருவாசகத்தில் பதினாறு இடங்களில் வருகின்றது. 'சிவபுரம்' என்பதைச் சிவலோகம் என்னும் பொருளில் பொதுவாகவே கொண்ட போதிலும், இத்தலத்தை நினைவுபடுத்துவதாகக் கொள்வதில் தவறு ஏதும் இல்லை. சம்பந்தர் அன்று.அடல் காலனைப் பாலனுக்காய்ப் பொன்றிகொள் உதைசெய்த புனிதன்நகர் வென்றிகொள் எயிற்றுவெண் பன்னிமுன்னாள் சென்றடி வீழ்தரு சிவபுரமே. அப்பர் கலையாரு நூல் அங்கம் ஆயி னான்காண்; கலைபயிலும் கருத்தன்காண் திருத்த மாகி மலையாகி மறிகடல்ஏழ் சூழ்ந்து நின்ற மண்ணாகி விண்ணாகி நின்றான் தான்காண்; தலையாய மலைஎடுத்த தகவி லோனைத் தகர்ந்துவிழ ஒருவிரலால் சாதித்து ஆண்ட சிலையாரும் மடமகள்ஒர் கூறன் தான்காண்; சிவன் அவன்காண் சிவபுரத்துஎஞ் செல்வன் தானே.