பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 திருத்தலப்பயணம் மணிவாசகர் அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்த மாய்க்கசிந்து உருக என்பரம் அல்லா இன்அருள் தந்தாய்: யான்.இதற்கு இலன்ஒர்கைம் மாறு: முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த முத்தனே! முடிவிலா முதலே! தென்பெருந் துறையாய்! சிவபெரு மானே! சீருடைச் சிவபுரத்து அரைசே 131. கலயநல்லூர் (சாக்கோட்டை) அமிர்தகலேசுரர்-அமிர்தவல்லி சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 1-1-56, 26-6-65. கும்பகோணத்திற்குத் தென்கிழக்கு 3 கல் அளவு, கும்பகோணம்நீடாமங்கலம் பெரு வழியில் இத்தலம் இருக்கின்றது. கோயில் அரிசில் ஆற்றின் தென்கரையில் இருக்கிறது. சுந்தரர் நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்துஅமரர் குறைந்துஇரப்ப நினைத்துஅருளிஅவர்க்குஆய் வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார் புரம்மூன்றும் எரிவித்தவிகிர் தன்ஊர் வினவில் சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும் தோத்திரமும் பலசொல்லித் துதித்துஇறைதன் திறத்தே கற்பாரும் கேட்டாரும் ஆய்எங்கும் நன்குஆர் கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லுனர் கானே.