பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 123 132. கருக்குடி (மருதாந்தநல்லுர்) சற்குணலிங்கேசுரர்-சர்வாலங்கிருதமின்னாள் சம்பந்தர் :. வழிபட்டநான் : 1-1-5; 26-6-கே. கும்பகோணத்திற்குத்தென்கிழக்கே மூன்று மைலிலுள்ள கலய நல்லுனருக்குத் தென்கிழக்கேஒருகல்தொலைவு. இத்தலத்துக்குக் கிழக்கே ஒன்றரைக் கல் அளவில் ஏனாதி நாத நாயனார் பிறந்த எயினனுசர் இருக்கின்றது. சம்பந்தர் ஊன் உடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்! கான்,இடை ஆடலான் பயில்க ருக்குடிக் கோன் உயர் கோயிலை வணங்கி வைகலும் வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே. 133. திருவாஞ்சியம் வாஞ்சிநாதர்-மங்களநாயகி சம்பந்தர் : 1. அப்பர் : 1. சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 7-5-56, 23-6-85. நன்னிலம் இரயில் நிலையத்திற்கு மேற்கே ஆறு கல் அளவு. வழியில் ஒன்றரை மைலில் திருக்கொண்டீச்சரமும், அதினின்றும் ஒன்றரை மைவில் நன்னிலத்துப் பெருங் கோயிலும் இருக்கின்றன. கோயிலில் எமனுக்கு ஒரு சந்நிதி இருக்கின்றது. இத்தலம் திருவாசகத்திலும் பேசப்பெறுகின்றது. சம்பந்தர் மாடம் நீடுகொடி மன்னிய தென்இலங் கைக்குமன் வாடி ஊடவரை யால்அடர்த்து அன்று அருள் செய்து அவர் வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப் பாட நீடுமனத் தார்வினை பற்றஅறுப் பார்களே.