பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 திருத்தலப்பயணம் அப்பர் : 1. புற்றில் ஆடுஅர வோடு புனல்மதி தெற்றும் செய்சடைத் தேவர்.பி ரான்பதி சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம் பற்றிப் பாடுவார்க் குப்பாவம் இல்லையே. சுந்தரர் மைகொள் கண்டர்எண் தோளர் மலைமகள் உடன்உறை வாழ்க்கைக் கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர் கைதை நெய்தலம் கழனி கமழபுகழ் வாஞ்சியத்து அடிகள் பைதல் வெண்பிறை யோடு பாம்புஉடன் வைப்பது பரிசே. மணிவாசகர் திருவாஞ் சியத்தில் சிர்பெற இருந்து மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 134. நன்னிலம் மதுவனேசுரர்-மதுவனநாயகி சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 7-5-56, 23-6-65. நன்னிலம் இரயில் நிலையத்திற்கு மேற்கே மூன்று மைலில் கோயில் இருக்கின்றது. இடையில் ஒன்றரை மைலில் திருக் கொண்டிச்சரம் என்னும் தலம் இருக்கின்றது. கோயில் சிறிய தாயினும், நன்னிலத்துப் பெருங்கோயில் என்று இதற்குப் பெயர். கோச்செங்கட் சோழர் கட்டிய மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்று.