பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X鲑 பொருள்'என்னும் உணர்வினர். அவர்கள் எவ்வளவு ஆர்வத்து டனும் பக்தியுடனும் பயணம் செய்தனர் என்பது என் போன்றோருக்குத்தான் நன்கு விளங்கும். செல்லும் வழிகள் மிக நன்றாக விவரிக்கப்பட்டுள்ளன. திருக்கள்ளில், இலம்பையங் கோட்டுர், பேரெயில், சிற்றேமம், நெல் வெண்ணெய், திருமாணிகுழி திருச்சோபுரம், திருக்கானுர், திருந்துதேவனகுடி, கூடலையாற்றுார், திருக்குரக்குக்கா, தொலைவில்லி மங்கலம், முதலிய தலங்களுக்குச் செல்லுவது எளிதல்ல. இத்தலங்களுக்கு இருமுறை சென்றது அரிய செயலே. முண்டிச்சுரம் என்பது கிராமம் என்று வழங்குகிறது. மிகக் குறுகிய காலத்தில் வெளியிடப் படுவதால் இந்நூலில் சில சிறு அச்சுப் பிழைகள் உள்ளன. அவற்றை வாசிப்போரே திருத்திக் கொள்ளலாம். இந்நூலில் நகரத்தார், பாடல் பெற்ற தலங்களில் செய்துள்ள திருப்பணிகளைப் பற்றிய குறிப்பு ஒன்று சேர்க்கப்பெற்றுள்ளது. இதில் அவர்கள் திருப்பணி செய்த காலம் குடமுழுக்குச் செய்த தேதி முதலியன சேர்க்கப் பெற்றிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இந்த நூற்றாண்டுத் தொடக்கத்திலும் நகரத்தார் செய்துள்ள திருப்பணிகள் முன்னாள் அரசர்கள் செய்த திருப்பணிகளுக்கும் மேலானவை என்றே சொல்லலாம். இந்தக் கோயில்களை நேரில் கண்டவர்களுக்கே நகரத்தார் செய்துள்ள திருப்பணிகளின் உண்மையான மதிப்பு நன்கு புலனாகும். இத்திருப்பணிகள் செய்யப்படாமலிருந்தால் அநேக தலங்கள் மறைந்தோ சிதைந்தோ போயிருக்கு மென்று திருப்பணி செய்யப் பெறாத சிவத்தலங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். நமது நாட்டுத் திருக் கோயில்களே நமது நாகரிகச் சின்னங்கள். இந்த அரிய பொக்கிஷங்களைப் பெரும் பொருட்செலவில் பாதுகாத்து வைத்த நகரத் தாருக்குத் தமிழ்ப் பெருமக்கள் பெரிதும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். தேவூர்த் தென் பால் திகழ் தரு திவில் கோவார் கோலம் கொண்ட'மூர்த்தியின் கோயிலைத் தேவூர்க் கோவிலார் விரைவில் செப்பனிடுவார்களென நம்புகிறேன். திரு வக்கரை, தலையாலங்காட்டுத் திருப்பணியும் வெஞ்சமாக்கூடல், திருப்பணியும் துறையூரில் அருள் நந்தி சிவாச்சாரியார் கோவிலைச் செப்பனிடுவதும் அவசியமே. நமது நாட்டுத் திருக்கோயில்களுக்கொப்பான ஆலயங்களை வேறெங்கும் காண முடியாதென்பது உலகறிந்த உண்மை. பெறற்கரியபிறவியைப்பெற்ற மக்கள் தம்வாழ்நாளில் எல்லாக் கோயில்களையும் கண்டுவழிபடஇயலாமற்போயினும் பாடல் பெற்ற தலங்களுக்காகிலும் சென்று வழிபட வேண்டுவது அவசியம் என்று கருதி தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்றபெருநோக்குடன் இவ்வரிய நூலைப்பெரும்