பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 3.25 சுந்தரர் கருவரை போல்அரக்கன் கயிலைம்மலைக் கிழிக்கதற ஒருவிர லால் அடர்த்துஇன் அருள்செய்த உமாபதிதாள் திரைபொரு பொன்னிநன்னீர்த் துறைவன் திகழ் செம்பியர்கோன் நரபதி நன்னிலத்துப் பெருங்கோயில் தயந்தவனே. 135. திருக்கொண்டீச்சுரம் பசுபதிசுரர்-சாந்தநாயகி அப்பர் : .ே வழிபட்டதான் : 7-5-56, 23-5-35. நன்னிலம் இரயில் நிலையத்திற்கு மேற்கே 1% கல் அளவு. கோயில் சிறியது. கோயிலைச் சுற்றிலும் அகழி இருக்கின்றது. முடிகொண்டான் ஆற்றுக்குத் தென்கரையில் கோயில் இருக்கின்றது. அப்பர் பாலன்.ஆய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம் மேலன் ஆய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து கோலன் ஆய்க் கழிந்த நாளும் குறிக்கோள். இலாது கெட்டேன்; சேல்உலாம் பழன வேலித் திருக்கொண்டிச் சரத்துஉ ளானே. 186. திருப்பனையூர் செளந்தரியநாதர்-பெரியநாயகி சம்பந்தர் 1. சுந்தரர் 1. வழிபட்டநாள் : 8-5-56, 24-6-65. திருவாரூருக்கு வடக்கே 6% மைலில் உள்ள ஆண்டிப் பந்தல் என்னும் கிராமம் சேர்ந்து அங்கிருந்து கிழக்கே ஒரு