பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 திருத்தலப்பயணம் மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். இத்தலம் திருவாசகத்திலும் பேசப் பெறுகின்றது. சம்பந்தர் வரம்முன் னிமகிழ்ந்து எழுவீர்கான்! சிரம்முன் அடிதா ழவணங்கும் பிரமன் னொடுமால் அறியாத பரமன் உறையும் பனையூரே! சுந்தரர் மண்எலாம்.முழ வம்அதிர்தர மாடமாளிகை கோபுரத்தின் மேல் பண்ணி யாழ்முரலும் பழனத் திருப்பனையூர் வெண்திலாச்சடை மேவியவிண் ண்வரொடுமண் ணவாதொழ அண்ணல் ஆகிநின்றார் அவரே அழகியரே! மணிவாசகர் துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் திருப்பனை யூரில் விருப்பன் ஆகியும். 137. திருவிற்குடி வீரட்டானேசுரர்-ஏலவார்குழலி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 8-5-56, 24-6-65. மாயூரம்-காரைக்குடி இருப்புப் பாதையிலுள்ள விற்குடி இரயில் நிலையத்திலிருந்து 3 கல் தொலைவில் கோவில் இருக்கிறது. எட்டு வீரட்டத் தலங்களில் இது ஒன்று. சலந்தராசுரனை மாய்த்த தலம் இது. எழுந்தருளும் மூர்த்தியின் திருக்கரத்தில் சக்கரம் இருக்கின்றது.