பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 127 சம்பத்தர் பெண்ஒர் கூறினர் பெருமையர் சிறுமறிக் கையினர் மெய்ஆர்த்த அண்ணல் அன்புசெய் வார்.அவர்க்கு எளியவர் அரியவர் அல்லார்க்கு விண்ணில் ஆர்பொழில் மல்கிய மலர்விரி விற்குடி வீரட்டம் எண்ணில் ஆவிய சிந்தையி னார்.தமக்கு இடர்கள் வந்து அடையாவே. 138. திருப்புகலூர் கோணப்பிரான்-கருந்தாழ்குழலி சம்பந்தர் : 2 அப்பர் : 5. சுந்தரர் : 1. வழிபட்டதாள் : 3-5-55, 23-6-85. நன்னிலம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே நான்கு கல், பெரிய கோவில், கோவிலைச் சுற்றிலும் திருக்குளம் அகழிபோல் அமைந்திருக்கின்றது. கோணப்பிரான் என்னும் பெயருடைய சுவாமியின் வடிவம் சிறிது சாய்ந்திருக்கிறது. அப்பர் சுவாமிகள் நெடுங்காலம் உழவாரப் பணி செய்து "புண்ணியா உன்னடிக்கேபோதுகின்றேன்.பூம்புகலூர்மேவிய புண்ணியனே" என்று கூறி, இறைவனோடு இரண்டறக் கலந்த திருத்தலம் இது. சுந்தரமூர்த்திகள் "கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை" என்று பாடியதும் இத்தலத்தில் தான். அறுபான் மும்மை நாயன் மார்களுள் ஒருவராகிய முருக நாயனார் பிறந்தருளியது இப்பதியில்.