பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 திருத்தலப்பயணம் சம்பந்தர் வாழ்ந்தநாளும் இனிவாழும் நாளும்இவை அறிதிரேல் வீழ்ந்தநாள்ளம் பெருமானை. ஏத்தாவிதி இல்லிர்காள்! போழ்ந்ததிங்கள் புரிசடையி னான்தன் புகலுரையே சூழ்ந்தஉள்ளம் உடையீர்கள்! உங்கள்துயர் திருமே. அப்பர் அங்கமே பூண்டாய் அனல்ஆ டின்னாய்! ஆதிரையாய்! ஆல்நிழலாய்! ஆன்ஏறு ஊர்ந்தாய்! பங்கம்ஒன்று இல்லாத படர்ச டையினாய்! பாம்பொடு திங்கள் பகைதிர்த்து ஆண்டாய்! சங்கைஒன்று இன்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சு உண்டுசாவா மூவாச் சிங்கமே! உன் அடிக்கே போது கின்றேன் திருப்புகலூர் மேவிய தேவ தேவே! சுந்தரர் நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துஉடல் நடுங்கி நிற்கும்.இக் கிழவனை. வரைகள் போல்திரள் தோள னே!என்று வாழ்த்தி னும்கொடுப் பார்இலை, புரைவெள் ஏறுஉடைப் புண்ணி யன்புக லூரைப் பாடுமின். புலவீர்காள்! அரையன் ஆய்அமர் உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. சேக்கிழார் மண்முதலாம் உலகேத்த மன்னுதிருத் தாண்டகத்தைப் "புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்" எனப்புகன்று நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி அண்ணலார் சேவடிக்கிழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்.