பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 129 139. திருப்புகலூர் வர்த்தமானிச்சுரம் வர்த்தமானேசுரர்-கருந்தாழ்குழலி சம்பந்தர் : . வழிபட்டதான் : 3-5-58, 23-8-85. இக்கோயில் திருப்புகலூர் கோவிலுக்குள்ளேயே ஒரு பகுதியாக இருக்கிறது. கோணப்பிரான் சன்னிதிக்கு வட பக்கத்தில் வர்த்தமானிச்சுரம் இருக்கிறது. இங்கே முருக நாயனார் திருவுருவம் காணப்படுகிறது. சம்பந்தர் ஈசன் ஏறுஅமர் கடவுள் இன்.அமுது எந்தை'எம் பெருமான் பூசு மாசுஇல்வெண் நீற்றர் பொலிவுஉடைப் பூம்புக லுனரில் மூக வண்டுஅறை கொன்றை முருகன் முப் போதும்செய் முடிமேல் வாச மாமலர் உடையார், வர்த்தமா னீச்சுரத் தாரே. சேக்கிழார். ஆன பெருமை வளம்சிறந்த அந்தண் புகலூர் அதுதன்னில் மான மறையோர் குலமரபின் வந்தார் முந்தை மறைமுதல்வர் ஞான வரம்பின் தலைநின்றார் நாகம் புனைவார் சேவடிக்கிழி ஊனம் இன்றி நிறைஅன்பால் உருகு மனத்தார் முருகனார். 140. இராமனதிச்சுரம் இராமனாதர்-கருவார்குழலி சம்பந்தர் : 1. வழிபட்டநாள் : 5-5-56, 23-6-65. திருப்புகலூருக்கு அடுத்துள்ள முடிகொண்டான் ஆற்றைக் கடந்து ஒருமைலில் இத்தலமிருக்கிறது. திருக்கண்ணபுரம்