பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 திருத்தலப்பயணம் என்னும் திருமால்தலத்துக்கு அண்மையில் இத்தலம் இருக்கிறது. இதற்குக் கிழக்கே ஒருகல் அளவில் திருச்செங்காட்டாங்குடி உளது. இத்தலமும் இராமனால் வழிபடப் பெற்றது என்பர். சம்பந்தர் தனமணி தையல்தன் பாகன் தன்னை அனமணி அயன்அணி முடியும் காணான் பனமணி அரவரி பாதம் காணான்: இனமணி இராமன திச்ச ரம்மே. 141. திருப்பயற்றுார் (திருப்பயற்றங்குடி) திருப்பயற்றீசர்-காவியங்கண்ணி அப்பர் : 1. வழிபட்டநான் : 8-5-56, 24-6-65. திருவிற்குடி என்னும் தலத்தினின்றும் கிழக்கே மூன்று கல் அளவு. அப்பர் தந்தை.ஆய்த் தாயும் ஆகித் தரணிஆய் தரணி உள்ளார்க்கு எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி எந்தை'எம் பிரானே! என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும் சிந்தையும் சிவமும் ஆவார் திருப்பயற் றுார னாரே!